கல்லடைப்பு நோய்

  1. நீண்ட தேங்கிய நீர், சுதை நீர், சருகு ஊறிய நீர் பருகுவதாலும்,
  2. வாயு பண்டங்களை அதிகம் உண்பதாலும்.(எடுத்துக்காட்டு ) மா பண்டங்கள், உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு.
  3. அழுகிய ஊசிய பித்தப் பண்டங்களை உண்பதாலும்(எடுத்துக்காட்டு) கோழி, மாம்பழம், தோசை, பூரி, பரோட்டா, வறுத்த உணவு பொருட்கள்.
  4. விந்து மாதம் இரண்டு முறைக்கு மேல் வெளியேற்றுவதாலும்
  5. போகம் பண்ணும்போது விந்துவை அடிக்கடி அடக்குவதாலும்
  6. கல், மண், எலும்பு, தயிர் இவை கலந்த உணவை உண்பதாலும், ஸ்னாக்ஸ் அதிகம் உண்பதாலும் கல்லடைப்பு நோய் வருகிறது.

    கல்லடைப்பு நோய் சித்த மருத்துவத்தில் 4 வகைகளாக உள்ளது.

    வளிக் கல்லடைப்பு

    அழல் கல்லடைப்பு

    ஐயக் கல்லடைப்பு

    முக்குற்ற கல்லடைப்பு

    இதில் முக்குற்ற கல்லடைப்பு தவிர மற்ற கல்லடைப்பு எளிதில் தீரும்.

சிறுநீரக கல்லடைப்பு இருந்தால் காணும் குறிகுணங்கள்

  1. அடிக்கடி சிறுநீர் இறங்கும் திடீரென்று அடைத்துக்கொள்ளும்.
  2. ஆண்குறியில் தாங்கமுடியாத வலி, எரிச்சல் உண்டாகும்.
  3. கல் உருண்டு கொண்டே வந்து நாளத்தில் அல்லது முனையில் வந்து தடைபட்டு அங்கு மிகுந்த வேதனை உண்டு பண்ணும்.
  4. முகம் வீங்கும்.
  5. வயிறு உப்பலாம்.
  6. சிறுநீருடன் ரத்தமும் வெளியேறலாம்.
  7. உடல் அனலாய் இருக்கலாம்.
  8. சிறுநீர் வெளியேறும்போது செந்நிறமான சிறிய கற்கள் வெளியேறலாம்.
  9. வியர்வை உண்டாகும். வாந்தி உண்டாகலாம்.
  10. வலி பின்பக்க இடுப்பு பகுதியிலிருந்து விதை வரையிலும் அல்லது தொடையிலிருந்து ஆண் பெண் குறி வரையிலும் இருக்கலாம்.

பித்தப்பை கல்லடைப்பு இருந்தால் காணும் குறிகுணங்கள்

  • நடு மார்பு பகுதியில் வலி நேர் பின் பக்கம் (முதுகு பக்கம்) வலி, வாந்தி, பசியின்மை, வலது தோள்பட்டையில் இருந்து மார்பு வரையிலும் வலி இருக்கலாம்.

கணைய கல்லடைப்பு இருந்தால் காணும் குறிகுணங்கள்

  • தொடர்ந்து வயிற்றுப்பகுதியில் வலி, சுகர் அளவு அதிகமாக இருத்தல், வலி நிவாரணி மருந்து ஊசி போட்டாலும் 6 மணி நேரத்தில் மறுபடியும் வலி வருதல் போன்ற குறிகுணங்கள் இருக்கலாம்.

Dr. E. Murugan, MD (S), is renowned for his rapid healing methods, not only in treating stone disease but also other illnesses.