டாக்டர் இ.முருகன் எம்.டி (எஸ்)

விஞ்ஞானம் எங்கு முடிவடைகின்றதோ அங்கு மெய்ஞானம் ஆரம்பமாகின்றது மெய்ஞானிகள் ஆகிய சித்தர்கள் இவ்வுலக மக்கள் நோயின்றி வாழ அருளியது தான் சித்த வைத்தியம் தமிழர்களின் அரிய பொக்கிஷம் ஆகும்.
சித்தர்களின் ஒவ்வொரு மூலிகையைப் பற்றியும் எந்தவிதமான ஆய்வுக்கூட ஆராய்ச்சியும் இல்லாமல் அவற்றின் மருத்துவ குணம் செய்கை பற்றி தெளிவாகவும் அருதியிட்டும் கூறிச் சென்றுள்ளனர். தொலைநோக்கி, சாட்டிலைட் போன்ற வசதிகள் இல்லாத காலத்திலேயே நவகிரகங்களை பற்றி கூறியதோடு அல்லாமல் அவற்றின் சுழற்சி முறைகளை பஞ்சாங்கமாக ஒரு வருடத்திற்கு முன்பே கணித்த மேதைகள் தான் சித்தர்கள்.