கல்லடைப்பு நோய்
- நீண்ட தேங்கிய நீர், சுதை நீர், சருகு ஊறிய நீர் பருகுவதாலும்,
- வாயு பண்டங்களை அதிகம் உண்பதாலும்.(எடுத்துக்காட்டு ) மா பண்டங்கள், உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு.
- அழுகிய ஊசிய பித்தப் பண்டங்களை உண்பதாலும்(எடுத்துக்காட்டு) கோழி, மாம்பழம், தோசை, பூரி, பரோட்டா, வறுத்த உணவு பொருட்கள்.
- விந்து மாதம் இரண்டு முறைக்கு மேல் வெளியேற்றுவதாலும்
- போகம் பண்ணும்போது விந்துவை அடிக்கடி அடக்குவதாலும்
- கல், மண், எலும்பு, தயிர் இவை கலந்த உணவை உண்பதாலும், ஸ்னாக்ஸ் அதிகம் உண்பதாலும் கல்லடைப்பு நோய் வருகிறது.
கல்லடைப்பு நோய் சித்த மருத்துவத்தில் 4 வகைகளாக உள்ளது.
வளிக் கல்லடைப்பு
அழல் கல்லடைப்பு
ஐயக் கல்லடைப்பு
முக்குற்ற கல்லடைப்பு
இதில் முக்குற்ற கல்லடைப்பு தவிர மற்ற கல்லடைப்பு எளிதில் தீரும்.
சிறுநீரக கல்லடைப்பு இருந்தால் காணும் குறிகுணங்கள்
- அடிக்கடி சிறுநீர் இறங்கும் திடீரென்று அடைத்துக்கொள்ளும்.
- ஆண்குறியில் தாங்கமுடியாத வலி, எரிச்சல் உண்டாகும்.
- கல் உருண்டு கொண்டே வந்து நாளத்தில் அல்லது முனையில் வந்து தடைபட்டு அங்கு மிகுந்த வேதனை உண்டு பண்ணும்.
- முகம் வீங்கும்.
- வயிறு உப்பலாம்.
- சிறுநீருடன் ரத்தமும் வெளியேறலாம்.
- உடல் அனலாய் இருக்கலாம்.
- சிறுநீர் வெளியேறும்போது செந்நிறமான சிறிய கற்கள் வெளியேறலாம்.
- வியர்வை உண்டாகும். வாந்தி உண்டாகலாம்.
- வலி பின்பக்க இடுப்பு பகுதியிலிருந்து விதை வரையிலும் அல்லது தொடையிலிருந்து ஆண் பெண் குறி வரையிலும் இருக்கலாம்.
பித்தப்பை கல்லடைப்பு இருந்தால் காணும் குறிகுணங்கள்
- நடு மார்பு பகுதியில் வலி நேர் பின் பக்கம் (முதுகு பக்கம்) வலி, வாந்தி, பசியின்மை, வலது தோள்பட்டையில் இருந்து மார்பு வரையிலும் வலி இருக்கலாம்.
கணைய கல்லடைப்பு இருந்தால் காணும் குறிகுணங்கள்
- தொடர்ந்து வயிற்றுப்பகுதியில் வலி, சுகர் அளவு அதிகமாக இருத்தல், வலி நிவாரணி மருந்து ஊசி போட்டாலும் 6 மணி நேரத்தில் மறுபடியும் வலி வருதல் போன்ற குறிகுணங்கள் இருக்கலாம்.